
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதுஎன திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மானாமதுரையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கனிமொழி, ''தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. தோல்வி பயத்தால் பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழகத்தில் பரப்புரை செய்கின்றனர்'' என விமர்சித்தார். நேற்று பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய தாராபுரம் வந்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தநிலையில், கனிமொழி தற்பொழுது இவ்வாறுதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)