விருதுநகரில் வரும் மார்ச் 24- ஆம் தேதி பா.ஜ.க. போராட்டம்!

The BJP will hold a rally on March 24 in Virudhunagar. Struggle!

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விருதுநகரிலே வரும் மார்ச் 24- ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் நடைபெறவுள்ளது. மாநில அரசு அரசியல் காரணங்களுக்காக நம் காவல்துறையை செயல்பட விடாமல் இருப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறது!

22 வயது நம் சகோதரியின் மீது விருதுநகரிலே நடத்தப்பட்ட கூட்டு பலாத்காரம் நம்முடைய நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது! தமிழகஅரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழகத்தில் நடந்த கடைசி பாலியல் வன்கொடுமை ஆக இது இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Annamalai Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe