Advertisment

கள்ளக்குறிச்சி நகரில் பாஜக-விசிக மோதல் அபாயம் பரபரப்பு!

bjp vck incident in kallakurichi

பெண்களை இழிவாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு இந்து மத அமைப்புகள்பாஜக, இந்து முன்னணி போன்ற கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் காவல் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

சென்னையில் திருமாவளவன் மீது போலீசார் வழக்கும்பதிவு செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் பெண்களை இழிவாக பேசியதாக கூறி திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார். போலீஸ் அனுமதி வழங்காத நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அதை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த தகவல் அறிந்த விசிக கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கச்சேரி சாலையில் திரண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்திய பிஜேபி கட்சி அரசியல் கட்சியினரும் தரப்பினரும் எதிரெதிரே நின்று வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் அங்கு இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்ப்பட்டது.

Advertisment

இதையடுத்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன் பிறகு காவல்துறை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய பாஜக கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதே போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பிஜேபி கட்சியினர் எண்பது பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

kallakurichi vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe