BJP - VCK

Advertisment

உயர் கல்வியான மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி 08.06.2020 திங்கள்கிழமைஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது வி.சி.க.வின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமைத் தாங்கினார். மேற்கு மா.செ. அம்பேத்கர், மண்டல அமைப்புச் செயலாளர் விநாயக மூர்த்தி கலந்து கொண்டார்.

ஆர்பாட்டத்தில் மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சிறப்புக் கல்வி நிறுவனங்கள், தனியார் துறைகளில் கட்டாயம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்ததாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.