Advertisment

'சூர்யா விளையாட வேண்டாம்; மாணவர்களை அளவிட ஒரு அளவுகோல் தேவை' -பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

BJP VANATHI PRESSMEET

நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக விவாதங்கள் தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள நிலையில், மாணவர்கள் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என தமிழக பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை செல்வபுரத்தில் தமிழக பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது பேசுகையில், ''சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யாவிளையாட வேண்டாம். மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளேகூடாது என்பதுபோல் சூர்யா பேசுகிறார். படிக்கும் மாணவர்களை அளவிடஒரு அளவுகோல் தேவைப்படுவதால்தேர்வு நடத்தப்படுகிறது. அவரது படம்ஓடட்டும், நன்றாக வசனங்கள் பேசுங்கள், ஆனால்எங்கள் மாணவர்களைஇருட்டில் தள்ளி விடாதீர்கள்'' எனக் கூறினார்.

Advertisment

suriya neet Vanathi Srinivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe