Skip to main content

தமிழக ஆளுநருடன் பாஜக குழுவினர் சந்திப்பு

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

BJP team meeting with Tamil Nadu Governor

 

தமிழகத்தில் பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருந்தார். அதன்படி இந்த குழுவில் முன்னாள் மத்தியமைச்சர் சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்த சூழலில் பாஜக தேசிய தலைமை உத்தரவின் பேரில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பாஜக குழுவினர் இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தனர். இந்த குழு பாஜக தொண்டர்கள் தமிழகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கள ஆய்வு செய்தனர். இதன் அறிக்கையை விரைவில் தேசிய தலைமைக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் 4 பேர் கொண்ட பாஜக குழுவினர் சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் பாஜக நிர்வாகிகளான அமர்பிரசாத் ரெட்டி, சூர்யா ஆகியோரின் வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து இந்த குழுவினர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக நிர்வாகிகள் கைது தொடர்பாக மனு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்