Advertisment

பா.ஜ.க மாநில துணைத்தலைவரானார் வி.பி.துரைசாமி!

தி.மு.க.-வில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பா.ஜ.க. துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் ஆனதால் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

அதன்படி, பொதுச் செயலாளராக இருந்த வானதி சீனிவாசன் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பா.ஜ.க.வில் சேர்ந்த பால் கனகராஜுக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பா.ஜ.க.-வின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகள் குறித்த அறிவிப்பைச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, எல்.முருகன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai bjp party Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe