தமிழக பாஜகவின்மாநிலச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் மாநிலச்செயலாளராகஎஸ்.ஜி. சூர்யா இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகியான இவர் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவதூறு வழக்கில் மதுரைசைபர்கிரைம்போலீசார், டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துநள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்துஎஸ்.ஜி. சூர்யாவைசென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரின் கைதையறிந்த பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் அங்குசிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கைதானஎஸ்.ஜி. சூர்யாவை மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.