வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து இருக்கும் நிலையில், திட்டமிட்டபடி தமிழகத்தில் யாத்திரை நடைபெறும் எனத்தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். இந்நிலையில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தற்போது சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.