Advertisment

பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க கோரி பாஜகவினர் போராட்டம்! (படங்கள்)

Advertisment

மாநில பாஜக தலைவர் K. அண்ணாமலை வழிகாட்டுதல்படி மாநில பட்டியல் அணி & மாநில வணிகர் பிரிவு இணைந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாநில பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், மாநில பட்டியல் அணித் தலைவர் பொன். பாலகணபதி மற்றும் மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜா கண்ணன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

தமிழ்நாடு பாஜக மாநில பட்டியல், மாநில தலைவர் பால கணபதி பேசும்போது, “தேர்தல் காலத்தில் பெட்ரோல் - டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்குவந்த பிறகு குறைக்காமல், மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்து பிறகும்கூட திமுக ஆட்சி விலையைக் குறைக்க முன்வரவில்லை. இந்த விலையைக் குறைக்க தமிழ்நாடு பாஜக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும்.” என்றார்.

struggle petrol Diesel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe