
டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக் கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9- ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19- ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பு பாஜக மாணவர் அமைப்பினர் இது தொடர்பாகபோராட்டம் நடத்தி வருகின்றனர். தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Follow Us