Advertisment
தமிழ்நாடு அரசு சமீபத்தில், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், இன்று (23ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக அறிவித்தது. அதன்படி இன்று மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.