Advertisment

திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர்! (படங்கள்)

Advertisment

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை தங்குதடையின்றி திறந்துவைத்து மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் இந்த ஆன்மீக விரோத திமுக அரசு, கரோனா பரவலைக் காரணம் காட்டி, வார விடுமுறை நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது என தமிழ்நாடு பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், இந்த ஆன்மீக விரோதப் போக்கினை வன்மையாக கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வழிபாட்டு தலங்களிலும் அக்டோபர் 7ஆம் தேதியான இன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் K. அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திமுக அரசை எதிர்த்து கண்டன உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியினை மாநில பாஜக இளைஞரணி தலைவர், வினோஜ் பி. செல்வம் ஒருங்கிணைத்தார்.

protest Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe