திமுக தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் முதல்வர் என புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார்.

அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்லத் திருமண விழாவில்பேசிய பாஜக கட்சியின் தமிழக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், "காலம் கணியும்; காரியங்கள் தானாக நடக்கும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்; நாம் அதை பார்க்க போகிறோம்" என்று கூறினார்.

Advertisment

dmk

அதையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பி.டி.அரசகுமார், "திருமண விழாவில், ஜனநாயக ரீதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள் என்று தான் சொன்னேன். அடுத்து முதலமைச்சர் அவர்தான் என்று நான் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்றுஅண்ணா அறிவாலயம் சென்ற பிடி.அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பி.டி.அரசகுமார், திமுகவில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது.உண்மை மற்றும் எதார்த்தத்தை, நடைமுறையை நான் வெளிப்படுத்தியதற்காககடந்த இரண்டு மூன்று தினங்களாக என் வாழ்நாளில் இதுவரை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் எல்லாம் கேட்கும் நிலை உருவானது. அப்போது கழக சொந்தங்கள் நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என அறிவுறுத்தியதை அடுத்து மனநிறைவோடுசெயல்பட திமுக வந்திருக்கிறேன் என்றார்.