Skip to main content

அவதூறு பரப்பிய பாஜக மாநிலச் செயலாளருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

BJP state secretary who spread defamation ordered to stay in Chidambaram and sign

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர் மற்றும் தரிசன விழாவின்போது தமிழக அரசின் அரசாணையை மீறி கோவில் தீட்சிதர்கள் கனக சபையில் பக்தர்கள் ஏறி வழிபடத் தடை விதித்து பதாகை வைத்தனர். இதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறையினரைக் கோவில் தீட்சிதர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்பில் அந்தப் பதாகை அகற்றப்பட்டது. பின்னர் ஜூன் 24 ஆம் தேதி மாலை கனக சபையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனக் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கோவில் தீட்சிதர்களிடம் வலியுறுத்தியபோது அவர்கள் அனுமதிக்க முடியாது எனப் பிடிவாதமாக இருந்தனர்.

 

இந்நிலையில் கனகசபையின் கிழக்கு வாயில் வழியாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் காவல்துறை பாதுகாப்புடன் தரிசனம் செய்துவிட்டு கீழே வந்தனர். இதற்குத் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூச்சலிட்டனர். மேலும் தீட்சிதர் பூணூலை அறுத்ததாகவும் தாக்கியதாகவும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறினார்கள்.

 

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா என்பவர் கோவில் தீட்சிதர்களைக் காவல்துறையினர் தாக்கியதாகப் போலியான செய்தியைச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.  இது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதாக சிதம்பரம் காவல்துறையினர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர்.

 

இதற்குப் பயந்து தலைமறைவாக இருந்த பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இதில் மறு உத்தரவு வரும் வரை, காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே  சு. வெங்கடேசன் எம்பி மீது அவதூறு பரப்பிய வழக்கில் கையெழுத்திட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மது போதையில் போலீசார் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Alcoholic attack on police; video goes viral

அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர் போலீசாரை தாக்கும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது நூற்றாஞ்சேரி. இந்த பகுதியில் உள்ள ஜோதி நகர் என்ற இடத்தில் நேற்று இரவு மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் உணவகத்திலேயே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உணவகத்தில் ஆம்லெட் கேட்டுள்ளார். உணவக ஊழியர்கள் ஆம்லெட் தராததால் ஆத்திரமடைந்த போதை நபர் மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்தார். 

இளைஞர் ஒருவர் மது போதையில் நடு சாலையில் அமர்ந்திருப்பது குறித்து தகவலறிந்து அங்கு வந்து சேலையூர் காவல் நிலைய இரவு நேர காவலர் கந்தன் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது காவலரை காலால் தாக்கி போதை இளைஞர் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் விரல் ஆக்கி வருகிறது.

Next Story

சிறுமிகளை திருமணம் செய்த வாலிபர்கள் போக்சோவில் கைது

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
nn

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பிணிகளாக்கிய வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லாங்குளம் காலனி நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிறுமியை ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் கோபியை சேர்ந்த ஆசிப் (28) என்பவரும் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கிருஷ்ணவேணி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிப் சிறுமியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.