Advertisment

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

BJP state executive home raided Important documents seized

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர். வெங்கடேசன். இவர் பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இவரது வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசாரும், ஆவடி மாநகர போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு (2023) மற்றும் நடப்பாண்டில் நில மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள் வீட்டில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது.

இந்த சோதனையின்போது கே.ஆர். வெங்கடேசன் வீட்டில் இருந்த நில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட 52 இடங்களில் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து கே.ஆர். வெங்கடேசன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதும், கடந்த ஆண்டு வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் கே.ஆர். வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

DOCUMENT police raid thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe