பெரியார் சிலையை உடைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் கனவிலும் நடக்காது என தந்தை பெரியார் திராவிட கழக தலைவரான கு.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியும், எச்.ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.வில் பெரிய பதவி கிடைப்பதற்காக எச்.ராஜா இதுபோன்று பேசி வருகிறார். பெரியார் சிலையை உடைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் கனவிலும் நடக்காது. சமூக விஞ்ஞானியான பெரியாரை மதநம்பிக்கை உள்ளவர்களும் ஏற்றுக்கொண்டு உள்ளனர் என்று கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Advertisment