
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தினை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை கண்டித்து சென்னை மாநகராட்சியின் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் தலைமையில் நேற்று பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டுவந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் வானதி சீனிவாசனுக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் அரசியலைப் புகுத்தி கட்சியை வலுப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது. ஏழை, எளிய மக்கள் பாதிக்கக்கூடிய விஷயங்களில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)