சிவகங்கைமாவட்டம் வடக்கு விசவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 52). ஆர்எஸ்எஸ் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றுவரும் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு நேற்று முன்தினம் வடக்கு விசவனூர்வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். நேற்று காலை வழக்கம் போல்எழுந்து வீட்டின் வெளியில் வந்து பார்த்தபோதுவெளி கேட் பகுதியில்மூன்று நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டுஇருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமசாமி இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது, வீட்டில் இருந்த சிசிடிவிகேமிராக்களை ஆய்வு செய்தபோதுவீட்டின் மற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமிராக்கள் இயங்கிக் கொண்டிருக்கும்நிலையில், சம்பவம் நடைபெற்ற வெளி கேட்டின் முன்பு இருந்த சிசிடிவிகேமராமட்டும்இயங்காமல் இருப்பது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு வெடிகுண்டுகளை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றிஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக பிரமுகரும்முன்னாள் எம்பியுமானசசிகலாபுஷ்பாவின்கணவர் தான் ராமசாமி. இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விவாகரத்து தொடர்பானவழக்குநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே போலீசார், சசிகலா புஷ்பாதரப்பு மீது இதற்கும்தொடர்புஇருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல் காரணமா? எனப் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.