BJP requesting to allow vel yatra  Villupuram and kallakurichi

‘வெற்றிவேல் வீரவேல்’ யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததை கண்டித்தும் தடையை நீக்கக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜி.கே.ராஜன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பஸ் நிலையம் எதிரில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அதில் முருகனைப் பற்றிய சிறப்பு பட்டப் பெயர்களைச் சொல்லி கோஷங்கள் எழுப்பினர். அதன்பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆரோவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் திருச்சிற்றம்பலம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

BJP

அதேபோல் கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க வினர் 220க்கும் மேற்பட்டோர்கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேல் யாத்திரைக்கு தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.