Advertisment

சமத்துவத்துக்கு ஊறு விளைவித்தால் அவ்வளவுதான் - வேல் யாத்திரை தொடர்பான கேள்விக்கு ஜெயக்குமார் பதில்!

k

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் வருகின்ற 6 -ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடக்க இருப்பதாக, தமிழக பா.ஜ.க அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் பாஜகவினர். இந்நிலையில் 'ஏர்கலப்பை யாத்திரை' நடத்த இருப்பதாக, தமிழக காங்கிரஸ் கட்சியும் அறிவித்திருக்கிறது.

Advertisment

பாஜகவின் இந்த யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கருத்துத்தெரிவித்துள்ளார். அதில், "பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி கொடுப்பது என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்யும். அமைதி பூங்காவான தமிழகத்தில் சாதி, மத, இன, மொழிச் சண்டைகள் கிடையாது. சமத்துவத்துக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் யார் செயல்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe