Advertisment

ராகுல் காந்தி வருகையை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம்.... 10 பேர் கைது...

bjp rally on rahul's way to watch jallikattu

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வந்தபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைப் பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் ராகுல்காந்தி வாகனம் சென்றபோது பாரதிய ஜனதா கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் "ராகுல் காந்தி கோ பேக்" என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமார் பத்து பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

jallikattu Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe