Advertisment

'பாஜக-வினர் பேரணி வருது... எங்கள் அண்டாவை காப்பாற்றுங்கள்' - பிரியாணி கடை உரிமையாளர்கள் மனு!

திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு காவல் நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக இஸ்லாமிய மக்கள், அனைத்து பிரியாணி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

Advertisment

BJP rally - Biryani shop owners Report

அதில் "நாங்கள் பெரிய கடையில் பிரியாணி கடை நடத்தி வருகிறோம். வருகிற வெள்ளிக்கிழமை அன்று சிடிசி கார்னரில் இருந்து, பெரிய கடை வீதியாக பாஜக-வினர் பேரணி செல்ல இருக்கிறார்கள். அதனால் எங்கள் பிரியாணி கடைக்கும், அண்டாவுக்கும் பாதுகாப்பு தருமாறு பிரியாணி கடைகள் சங்கம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

BJP rally - Biryani shop owners Report

புகார் கொடுத்தவர்களின் பெயரும், அலைபேசி எண்ணும் சிவப்பு மையால் அழிக்கப் பட்டிருக்கிறது. இதேபோல் கோவையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும் பிரியாணி கடைகளுக்கு பாதுகாப்பு கேட்டு மாநகர காவல்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.

briyani rally
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe