வாஜ்பாய் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பாஜகவினர்! (படங்கள்)

பாஜகவின் மூத்த தலைவர்களில்ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, தனது 93வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இருக்கும் அவரது நினைவிடத்தில் நாட்டின் முக்கியத் தலைவர்கள், மந்திரிகள், நிர்வாகிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். அதே போல் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநிலப் பொதுச் செயலாளர் கருநாகராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்டபலரும் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினார்.

Atal Bihari Vajpayee
இதையும் படியுங்கள்
Subscribe