நாகை அருகே பாஜக நிர்வாகி செந்தில்குமார் மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்து ஆற்றில் வீசியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாகை மாவட்டம் காமேஸ்வரம் அருகே உள்ள கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட கீழையூர் போலீசார் ஆற்றில் படுகொலை செய்யப்பட்டு மிதப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பதை கண்டறிந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமூக விரோதிகளால் செந்தில் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர் பாஜகவினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேளாங்கண்ணி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கீழையூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்த படுகொலை நடந்திருப்பது அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.