Advertisment

"மத்திய பா.ஜ.க. அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கரோனா தடையாக இருக்கிறது"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

bjp party meeting union finance minister nirmala sitharaman speech

மத்திய அரசின் சாதனை குறித்து தமிழக பா.ஜ.க.-வினருடன் காணொளி மூலம் பேசினார்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில்,

Advertisment

"மத்திய பா.ஜ.க. அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கரோனா தடையாக இருக்கிறது. அரசின் சாதனைகளைக் கிராம மக்களிடம் டிஜிட்டல் முறையில் கொண்டு செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். தேர்தல் பரப்புரையில் பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. பதவி ஆசை காரணமாக அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வேதனை; தி.மு.க.-வின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை டிஸ்மிஸ் செய்தது காங்கிரஸ் கட்சி. தி.மு.க. தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய காங்கிரஸ் கட்சிக்கு இன்று தி.மு.க. ஆதரவு அளிப்பது ஆச்சரியம்."இவ்வாறு மத்திய நிதியமைச்சர் பேசினார்.

Advertisment

BJP LEADERS Nirmala Sitharaman Tamilnadu UNION FINANCE MINISTER
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe