Advertisment

"பா.ஜ.க.வில் சேர சுந்தர்.சி காரணமில்லை" - குஷ்பு விளக்கம்!

bjp party kushboo press meet at chennai

Advertisment

பா.ஜ.க.வில் சேருவதற்கு கணவர் சுந்தர்.சி காரணமில்லை எனகுஷ்பு விளக்கமளித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, "2ரூபாய் வாங்கிக் கொண்டு என்னைப் பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான். இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டித்தான் வந்துள்ளேன். வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். எதிர்க்கட்சியில் இருந்ததால் ஆளுங்கட்சியை எதிர்த்தேன். பா.ஜ.க.வில் சேருவதற்கு என் கணவர் சுந்தர்.சிகாரணமில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே பா.ஜ.க.வில் சேர்த்துள்ளேன்; பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை. என்னை நடிகையாக காங்கிரசார் பார்த்ததாகக் கூறிய கே.எஸ்.அழகிரி தான், தலைவர் வேடத்தில் நடிக்கிறார். காங்கிரஸில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் பா.ஜ.க.வை விமர்சித்தேன்". இவ்வாறு குஷ்பு கூறினார்.

actress kushboo Chennai PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe