தென் தமிழகத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலுக்கு இன்று (10.12.2019) வந்திருந்தார் தென்னிந்திய பிரபல சினிமா ஹீரோயின் நயன்தாரா! முருகனை தரிசிக்கவும் சில முக்கிய பூஜைகளில் கலந்துகொள்வதற்காகவும் வந்திருந்த நயன்தாராவுக்கு, மிகுந்த மரியாதை தந்திருந்தனர் கோவில் குருக்கள்கள்.

Advertisment

அதே போல, முக்கிய பூஜைகள் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார் பாஜக பிரமுகரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன். தேசிய அளவில் பாஜக மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவர் இவர். திருச்செந்தூர் கோவிலுக்கு இவரும் செல்ல, நயன்தாராவும் நரசிம்மனும் அருகருகே அமர்ந்தபடி பூஜைகளில் கலந்துகொண்டனர். தனது அருகில் இருப்பது பிரபல நடிகை நயன்தாரா என்பதை அறிந்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் நரசிம்மன்.

BJP PARTY HAS INVITE IN ACTRESS NAYANTHARA

நயன்தாராவும் சகஜமாக நரசிம்மன் குடும்பத்தினரோடு அலாவுலாயிருக்கிறார். இதனை அடுத்து அரசியல் ரீதியாக நயன்தாராவிடம் பேசிய அவர், "உங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். உங்களுக்கான சிறந்த கட்சி பாஜக தான். பாஜகவில் இணைந்த திரைபிரபலங்களுக்கு உரிய மரியாதையை பாஜக தரும். சினிமாவின் புகழை வெறும் நடிப்பு என்பதோடு நிறுத்தி விடாதீர்கள். அந்த புகழை வைத்து சமூகத்தின் நலன்களுக்காகப் பாடுபட வேண்டும்.அதனால் அரசியலுக்கு வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார் நரசிம்மன்.

Advertisment

அதற்கு மெல்லிய புன்னகையை வெளிப்படுத்திய நயன்தாரா, நரசிம்மன் கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கி வைத்துக்கொண்டார். அத்துடன், "சூழல் அமையும் போது உங்களிடம் பேசுகிறேன் " என்றிருக்கிறார் நயன்தாரா. ஏறத்தாள ஒன்னரை மணி நேரம் நடந்த பூஜைக்குப் பிறகு கோவிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

CAB