/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinoth 4343.jpg)
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை சிறையில் அடைத்த காவல்துறையினர், பா.ஜ.க. அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பை அளித்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத் என்பவர் மீது வெடிபொருட்களால் சொத்தைசேதப்படுத்துதல் மற்றும் வெடிபொருள் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவரை நீதிமன்றகாவலில் சிறையில் அடைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீசியதை அடுத்து, பா.ஜ.க. அலுவலகம் அமைந்துள்ள தெருவில் இருபுறமும் கூடுதலாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்த அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow Us