Published on 02/01/2019 | Edited on 02/01/2019

அதிமுகவின் மூன்று அணிகளும் இணைவதற்கு 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது பாஜக.
சசிகலா தம்பி திவாகரை பாஜக பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர் மூலம் சசிகலாவை தொடர்பு கொண்டு அதிமுக அணிகளை இணைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இந்த வேலை 15 நாட்களுக்குள் முடிய வேண்டும் என பாஜக வட்டாரங்கள் கெடு விதித்து திவாகரனிடம் சொல்லியுள்ளன. 15 நாட்களுக்குள் முடியவில்லை என்றால் சசிகலா மீது புதிய நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.