BJP national president JP Nadda pressmeet in Chennai

Advertisment

தமிழகத்தில் இரண்டு நாட்களாக தங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், இன்று (04/04/2021) மாலை சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "தமிழக சட்டமன்றத் தேர்தலில் எல்லா இடங்களிலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும். மேற்குவங்கத்தில் இரண்டு கட்டத் தேர்தல் முடிந்தாலும் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சி அமையும், அசாமில் பா.ஜ.க. ஆட்சி தொடரும். புதுச்சேரியில் முந்தைய நாராயணசாமி ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. வருமான வரித்துறையினர் அவர்களின் பணியைச் செய்கிறார்கள்; அதை அரசியலாக்குகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் களம் அ.தி.மு.க.- பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது" என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஜெ.பி.நட்டாவுடன் மத்திய உள்துறை இணையமைச்சரும், பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளரும், கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.