BJP MURUGAN MEET EPS TODAY

அ.தி.மு.க.வில், நீண்டபேச்சுவார்த்தைக்குப் பிறகு,கடந்த 7-ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியேமுதல்வர் வேட்பாளர் எனஅறிவித்தது அ.தி.மு.க தலைமை.அதனை அடுத்து, தற்போது அடுத்த கேள்வியும் எழுந்துள்ளது. வரும்சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி தொடருமா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளது.

Advertisment

இதற்கு காரணம் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட அன்றேசெய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பா.ஜ.க இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடனோ அதேவேளை தி.மு.க.வுடனோகூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.தேர்தல் நேரத்தில் தான், கூட்டணிதொடர்பான முடிவு எடுக்கப்படும். தற்பொழுது அ.தி.மு.க.வுடன்இருக்கும் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி என்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி தொடருமாஎன்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியைஅவரது இல்லத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.