Advertisment

உயிர்காக்கும் மருந்துக்கு வரி விலக்கு - வானதி சீனிவாசன் நன்றி!

bjp mla vanathi srinivasan thanks to union finance minister

Advertisment

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 மாத குழந்தை மித்ராவின் சிகிச்சைக்கான ரூபாய் 16 கோடி மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி நேற்று (13/07/2021) காலை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் வானதி சீனிவாசன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், குழந்தையின் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துக்கான வரியை ரத்து செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், "குழந்தைமித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்" என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Nirmala Sitharaman Tweets Vanathi Srinivasan MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe