ஆளுநருடன் பாஜகவினர் சந்திப்பு; பரபரப்பில் உளவுத்துறை!

BJP members meet with Governor rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று இரவு பாஜகவினர் சிலர் சந்தித்து பேசியுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழக பாஜகவின் முக்கிய பிரமுகர் திருப்பதி நாராயணன், சென்னை மாநகராட்சியின் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ஆகிய மூவரும் தனித்தனிக் காரில் நேற்று இரவு ராஜ்பவனுக்குச் சென்றனர். பின்னர் மூவரும் ஆளுநர் ரவியை சந்தித்துள்ளனர். எதற்காக இந்த சந்திப்பு ? என்று உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து நாம் விசாரித்தபோது, “ரெட் கிராஸ் அமைப்பிற்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இதில் போட்டியிடும் நபர்களிடையே விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆளுநர் ரவியின் நாமினியாக ஜெயந்திரன் இருக்கிறார். பாஜகவினரும் இந்த தேர்தலில் தலையிட்டுள்ளனர். போட்டியாளர்கள் சிலர், பாஜகவினருக்கு எதிராக இருப்பதாக சொல்லப்படுகிறது. கிரிமினல் பேக் கிரவுண்ட்டுள்ள மார்வாடி ஒருவர் தலையீடும் அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் தான் இது குறித்து ஆளுநர் ரவியிடம் புகார் கொடுக்கவும், ஆலோசனை பெறவும் பாஜகவினர் சந்தித்துள்ளனர்" என்று கூறுகின்றனர் ராஜ்பவனுக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நிலையில், ஆளுநர் ரவி கொல்கத்தாவுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.

governor RN RAVI tn govt
இதையும் படியுங்கள்
Subscribe