தமிழ்நாடுபாஜகதலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அண்ணாமலை நாளை (16.07.2021) பதவியேற்க உள்ளார். இதற்காக, கோவையில் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்னை செல்லும் அவர், திருச்சிக்கு இன்று காலை வந்தடைந்தார். திருச்சி வந்த அவருக்கு மேலசிந்தாமணி பகுதியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருந்தனர்.
இதனிடையே பாஜகவினர் அவருடைய வருகைக்காக வெடி வெடிக்க தயார் செய்த நிலையில், காவல்துறையினர் வெடி வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நீண்ட நேரம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சனை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் பாஜகவின் தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலையின் வாகனம் வந்தது. அப்போது பாஜகவினர் வெடிகளை வெடிக்கச் செய்தனர். காவல்துறையினரும் ஒதுங்கி நின்றனர்.