Advertisment

நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து பா.ஜ.கவினர் தாக்குதல்! (படங்கள்)

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதையடுத்து நாஞ்சில் சம்பத் வருகை தருவதாக கூறப்பட்ட தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது காவல்துறை வாகன பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத் காரில் வருவதை அறிந்த பா.ஜ.கவினர் காரை சுற்றி முற்றுகை இட்டு, நாஞ்சில் சம்பத்தை தாக்க முயற்சித்தனர். மேலும் காரின் முன் பக்கம், பின்பக்கம் மற்றும் கதவுகள் என கைகளால் காரை அடித்தனர். அதேசமயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் தடுக்க முயன்ற போது, பா.ஜ.கவினருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை தடுத்து அப்புறப்படுத்திய போலீசார் நாஞ்சில் சம்பத் காரை பள்ளியை நோக்கி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்காத காவல்துறையினர், ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கிறீர்கள்? என கேட்டு பா.ஜ.கவினர் காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியலை கைவிட கோரி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisment

சுமார் 30 நிமிடத்திற்கு பின்னர் பா.ஜ.கவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், கடந்த சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக கலந்துகொள்ள வந்த நாஞ்சில் சம்பத்தை எதிர்த்து பாஜகவினர் ‘கோ பேக் நாஞ்சில்’ என ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Cuddalore nanjil sampath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe