BJP members arested in thiruvannamalai for vel yatra

Advertisment

திருவண்ணாமலை நகரில் வேல்யாத்திரை நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் ஜீவானந்தம் செய்ய, செலவுகளை பாஜக வர்த்தகர் அணியின் மாநில துணை தலைவர் தணிகைவேல் ஏற்றுக்கொள்ள கூட்டம் திரட்டப்பட்டது. கிராமங்களில் இருந்து 50 வயதுக்கு மேலானவர்களை தலைக்கு 300 ரூபாய், பிரியாணி, புடவை என ஆசைக்காட்டி அழைத்து வரப்பட்டிருந்தனர். வந்திருந்த கூட்டங்களில் 70 சதவிதம் வயதானவர்களாக இருந்தனர்.

BJP members arested in thiruvannamalai for vel yatra

Advertisment

இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வேல்யாத்திரை பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்தனர். மேடையில் நிற்பதற்கு நிர்வாகிகள் பலருக்குமிடையே முட்டல் மோதல் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் கைது செய்ய போலீஸ் முடிவு செய்ததும், ‘கூப்டாங்க வந்தேன்; என்னைய எதுக்கு கைது செய்றீங்க’ என பலரும் எஸ்கேப்பாகினர். கைதானவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கட்சிக்கு அவமானம் என ஆட்களை அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள், கைதானால் தான் பணம், பிரியாணி தருவாங்க எனச் சொல்லி பேருந்துகளில் ஏறவைத்தனர்.

BJP members arested in thiruvannamalai for vel yatra

திருமண மண்டபங்கள், மடங்கள் என 4 இடங்களில் கைது செய்தவர்களை அடைத்துவைத்தது போலீஸ். அங்கு பெண் போலீஸார் அமர்ந்து கைதானவர்களின் பெயர், முகவரி, செல்ஃபோன் எண்ணை எழுதி வாங்கினர். அங்க பெயர் தந்தால்தான் பிரியாணியும், பணமும் தருவாங்களாம் என மண்டபத்துக்குள்ளும் பாஜக நிர்வாகிகள் சொல்லியுள்ளனர். பெயர் வாங்கிக்கொண்டு அவர்களை வெளியே அனுப்புங்கள் எனச்சொல்ல, வெளியேறிவர்களுக்கு பிரியாணி பாக்ஸ், தால்சா பாக்கெட், தண்ணீர் பாட்டில் தந்து அனுப்பிக்கொண்டு இருந்தனர் பாஜக நிர்வாகிகள்.

படங்கள்: விவேகானந்தன்