என்கிட்டயே பணம் கேட்கிறீயா? மதுபான பார் ஊழியரை தாக்கிய பாஜக நிர்வாகி

BJP member attacked liquor bar employee

திருவள்ளூரில் மதுபான பாரில் சைடிஷ் வாங்கியதற்குபணம் கேட்டஊழியரை பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் நகர பாஜக இளைஞரணிதலைவர் உதயா. கார்த்திகேயன் என்பவர் கடந்த 3 ஆம் தேதி திருப்பாச்சூர் மதுபான பாரில் 160 ரூபாய் மதிப்பிலான சைடிஷ் வாங்கி மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் அந்த மதுபான பாருக்கு வந்த கார்த்திகேயனிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் பிரசாத் பணம் கேட்டிருக்கிறார். அதற்கு கார்த்திகேயன் நான் பாஜக நிர்வாகி, என்னிடமே நீ பணம் கேட்கிறாயா என்று கூறி, அந்த பார் ஊழியரை தகாத வார்த்தையில் திட்டி, அவரைதாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பாஜக நிர்வாகி கார்த்திகேயன் மீது புகார் அளிக்கப்படவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

police thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe