Advertisment

நடிகர் சூர்யாவைக் கண்டித்து பா.ஜ.க. தீர்மானம்!

bjp meeting actor surya neet exam

Advertisment

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (04/07/2021) காலை நடைபெற்றது. பா.ஜ.க.வின் மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் அணி தலைவர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொணடனர்.

நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து பேசி வரும் நடிகர் சூர்யாவைக் கண்டித்து பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"மாணவர்களைக் குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா உண்மைக்கு மாறான தகவலைப் பரப்புகிறார். மோடி அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் சூர்யா. அவர் இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளாவிடில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.

actor surya neet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe