Skip to main content

'தருமபுரி' பட்டின பிரவேசத்திற்கு நானும் போவேன்-மதுவந்தி ஆவேச பேச்சு!

Published on 06/05/2022 | Edited on 07/05/2022

 

bjp madhivanthi viral speech

 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த மதுவந்தி 'ஜார்ஜ் கோட்டையில் தாமரை மலர் தான் போகிறது என்றதோடு தருமபுரம் ஆதினத்திற்கு பதிலாக தருமபுரி என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

 

'இந்து ஆன்தம்' நிகழ்ச்சியில் பேசிய மதுவந்தி, ''தமிழகத்தைக் காக்க வந்த சிவனைப் போல் எங்க மாநில தலைவரும் (அண்ணாமலை) தமிழ் நாட்டை காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதற்கு முன்பு பத்திரிகையாளர் ஒருவர் என்னை போனில் தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக நீங்கள் கலந்து கொள்வீர்களா என்று கேட்டார். இன்று இந்துக்கள் இருக்கக்கூடிய நிலைமை பார்த்தீர்களா? இந்துக்களுக்காக 'இந்து ஆன்தம்' என்ற ஒன்று தயார் செய்ய வேண்டியுள்ளது, அதற்கு இந்து பெண்மணி ஒருவர் வரும் பொழுது கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என்று ஒரு கேள்வி. இன்று இந்துக்களுக்கு இருக்கக்கூடிய நிலைமை இதுதான். இது மாறியாக வேண்டும்.

 

நேஷனல்  ஆன்தத்திற்குப்  பிறகு 'இந்து ஆன்தம்' பெயரை இங்கு தான் நான் பார்க்கிறேன். எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நமக்கு எதுக்கு வம்பு வேண்டவே வேண்டாம்  என அமெரிக்கா ஓடிப் போய் விட்டார்கள். அண்மையில் அருமையான கேள்வியை  எச்.ராஜா கேட்டிருந்தார், அக்பரின் அப்பா யார் என்று தெரியும் அவருடைய பிள்ளை யாரென்று தெரியும் ராஜராஜ சோழனுடைய அப்பா யாரு, யாருக்காவது தெரியுமா? தெரியாது... ஏன் தெரியாது... சொல்லப்படவில்லை. புத்தகத்தில் இல்லை. கற்றுக் கொடுக்கின்ற ஹிஸ்டரி எல்லாமே பொய். தவறான ஹிஸ்டரி. அதைத்தான் தலைமுறை தலைமுறையாக படித்து வருகிறோம். இதுதான் புதிய கல்விக் கொள்கையில் மாற்றப்படுகிறது. 11 ஆழ்வார், 63 நாயன்மார் வாழ்ந்த பூமி இது, ஆறுபடை வீடும் இங்கதான் இருக்கு. புண்ணிய சேத்ரம் காசி ஒரு பக்கம் என்றால் ராமேஸ்வரம் ஒரு பக்கம் தமிழ்நாட்டில் தான் இருக்கு. சும்மா சும்மா தமிழ்நாட்டில் திராவிடம் என்ற வார்த்தைக்கு தப்பு தப்பா அர்த்தத்தை கொடுத்துள்ளனர். நான்கு மாநிலங்களும் சேர்த்து 'திராவிட தேசம்' என்று அப்பொழுது பெயர் இருந்தது. அதை வைத்துக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மதுரை மெடிக்கல் காலேஜில்  சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக  ஒரு சர்ச்சை. திராவிடம் என்பதே சமஸ்கிருதம் தான். தர்மபுரி பட்டின பிரவேசத்திற்கு அனுமதி தர மாட்டோம் சொல்லிப் பாருங்களேன். இதேபோல் அனுமதி தரமாட்டோம்னு வாடிகனுக்கு போய் சொல்லுங்க பாப்போம். வாடிகன் கூட போக வேண்டாம் சாந்தோம் வரைக்கும் சென்று சொல்லிப்பாருங்கள். அந்த தைரியம் இருக்கா?  நாம் அரவணைத்துக் கொண்டே இருந்தோம் அதனால் திருப்பி அடிக்க தெரியவில்லை, கற்றுக் கொடுக்கவில்லை நமது தர்மத்தில். இன்னைக்கு தேவையில்லாமல் என் காலை மிதித்தால் உன்னை நான் தள்ளி விடுவேன் மிதிக்க மிதிக்க வாங்கோ வாங்கோ என்று சொல்லமாட்டேன் இனிமேல். அதற்குத்தான் ஜீயர் ஒருவர் அருமையான ஸ்டேட்மெண்ட் ஒன்றை கொடுத்துள்ளார். ஒண்ணுமே பேச முடியவில்லை. பட்டின பிரவேசம் நடக்க இருக்கிறது எங்கள் மாநிலத் தலைவர் பல்லக்கை தூக்கி கொண்டு சுமக்க இருக்கிறார். நாங்கள் எல்லோரும் போவோம் தர்மபுரிக்கு.

 

இனிமேல் இந்த மாதிரி தவறுகள் நடந்தால் தட்டிக் கேட்போம். இந்துக்கள் எழுந்து கேள்வி கேட்போம் இனிமேல். இந்து என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்பட தேவையில்லை. யாரையும் இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரையும் அரவணைத்து தான் போய்க் கொண்டிருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சி போன்ற ஒரு செக்யூலர் கட்சியை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது. நாங்க தான் செக்யூலர். இவர்கள் தான் ஜாதி, மதம், இனம் இதை வைத்துக்கொண்டு பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்