style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இன்று செய்தியாளர்களை சந்தித்தபாஜக இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணிதான் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றும்.
நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற நிலைக்கு உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறிய அவர், எதைவைத்து கோடநாடு வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள். தேர்தல் வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் குற்றம் சாட்டுபவர்கள் ஆதாரங்களை வைத்துக் கொண்டு வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட வேண்டும் என கூறினார்.