ர

Advertisment

தமிழகத்தில் சில நாட்களாக பாஜகவினர் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு இந்த யாத்திரைக்கு தடை விதித்ததாக கூறினாலும், தினமும் பாஜகவின் யாத்திரை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கடலூரில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயன்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணை தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலையில் இந்த கூட்டத்திற்கு செல்ல முயன்ற போதுதான் குஷ்பு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.