முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கிறார் எல்.முருகன்!

bjp leader l.murugan meet admk leader, cm palanisamy for today

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (28/12/2020) சந்திக்கிறார் பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன்.

அடுத்தாண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அ.தி.மு.க. கட்சியின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கப் பொதுக்கூட்டம் நேற்று (27/12/2020) காலை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என பேசியிருந்தார். இது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் இழுபறி நீடிக்கும் நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (28/12/2020) மதியம் 01.00 மணிக்கு சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admk BJP LEADERS cm edappadi palanisamy l.murugan
இதையும் படியுங்கள்
Subscribe