
பாஜக பிரமுகரான கல்யாணராமன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னால் முதல்வர் கலைஞர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகக் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அவரைக் கடந்த 16ம் தேதி நள்ளிரவு கைது செய்தனர். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனம் என்ற பெயரில் அவதூறு செய்திகளை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில் தற்போது அவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் ஜாமீனில் வெளியே வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் கல்யாணராமனின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்க சைபர் கிரைம் போலீஸார் ட்விட்டர் நிறுவனத்திற்குப் பரிந்துரை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.