விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செய்யாங்குப்பம் ஊராட்சியில் கடந்த மே 1ம் தேதி ஊராட்சி மன்றத் தலைவி சுமதி தலைமையில், ஊராட்சி செயலாளர் வீரப்பன் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர் பரமேஸ்வரி மற்றும் கிராம தூய்மைப் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஊராட்சியின் முன்னாள் ஊராட்சித் தலைவரான பிரேம், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவராக பதவியில் உள்ளார். இவர் கிராம சபை கூட்டம் நடைபெற்ற அன்று இரவு ஊராட்சியின் பணித்தள பொறுப்பாளராக உள்ள பரணீஸ்வரிக்கு போன் செய்துள்ளார். போனில் நீ திமுக காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர். இனிமேல் கிராம ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தில் நான் கூறும் ஆட்களைத் தான் நீங்கள் வேலைப் பணிக்கு சேர்க்க வேண்டும் என்று கூறி மிரட்டியதோடு ஆபாச வார்த்தையில் பேசியதாக பரமேஸ்வரி மீது மரக்காணம் காவல் நிலையத்தில் பிரேம் புகார் கொடுத்துள்ளார்.
இதே பிரச்சனை தொடர்பாக மரக்காணம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ்பிரேம் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த இரு புகார்களின் அடிப்படையில் மரக்காணம் போலீசார் விசாரணை செய்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் பிஜேபி பிரமுகருமான பிரேம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக தேடி வருகிறார்கள். பிரேம் தற்போது தலைமறைவாக உள்ளார்.