சென்னையில் பா.ஜ.க. நிர்வாகி கொலை - 4 பேர் கைது!

BJP LEADER INCIDENT POLICE INVESTIGATION

பா.ஜ.க.வின் சென்னை மத்திய சென்னை மாவட்ட பட்டியலின அணித் தலைவர் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடையதாக நான்கு பேர், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய நான்கு பேரிடமும், கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

சென்னை பா.ஜ.க. பிரமுகரான பாலச்சந்தர் நேற்று முன்தினம் (24/05/2022) நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, ஏழு தனிப்படைக் காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வந்தனர். இதில் கொலை செய்தவுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற பிரதீப், சஞ்சய், கலைவாணன் ஆகிய மூன்று பேரும் சேலத்திற்கு அருகே உள்ள எடப்பாடியில் ஜோதி என்பவரது வீட்டில் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், ஜோதி உள்பட நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர்களை சென்னை அழைத்து வந்து விரிவான விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நான்கு பேர் தவிர கொலை வழக்கில், தொடர்புடைய மேலும் சிலரையும் காவல்துறையினர் தேடு வருகின்றனர்.

incident leaders
இதையும் படியுங்கள்
Subscribe