சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, "பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் ரஜினி இருக்கிறார் என்பது உண்மை அல்ல. கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை. ரஜினி கட்சித் தொடங்குவதால் தி.மு.க.விற்கு தான் பலவீனம். வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்பட போவதில்லை" என்றார்.