Advertisment

"மக்கள் நன்றிக் கடனை செலுத்துங்கள்!"- சி.டி.ரவி பேச்சு!

bjp leader ct ravi speech at chennai meeting

சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில், கராத்தே தியாகராஜன் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

Advertisment

இதையடுத்து, கராத்தே தியாகராஜனுக்கு சால்வை அணிவித்து சி.டி.ரவி வரவேற்க, கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார் எல்.முருகன். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் நிர்வாகிகளான முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ராதாரவி, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, "அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் உங்கள் நன்றிக் கடனைச் செலுத்தவேண்டும். பல திட்டங்கள் கொடுத்தும் தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இல்லை. தமிழர்களின் நன்மையைப் பேணும் நண்பர் மோடி.காங்கிரஸ், தி.மு.க.தான் எதிரி" என்றார்.

Chennai Leader
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe