Advertisment

வீட்டுவாசலில் கொழுந்துவிட்டு எரிந்த கார்; அம்பலமான பாஜக பிரமுகரின் சதி

BJP leader car incident - New twist in the investigation!

பா.ஜ.க. பிரமுகரின் காருக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் அவரே தனது காருக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலில் உள்ள பா.ஜ.க. பிரமுகர் சதீஷ்குமாரின் காரை ஒரு ஆணும், பெண்ணும் தீ வைத்துக் கொளுத்துவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சதீஷ்குமார் தனது காருக்கு தானே தீ வைத்துக் கொளுத்தியுள்ளது தெரிய வந்தது.

Advertisment

காரை விற்று நகை வாங்கி தருமாறு மனைவி வற்புறுத்தியதால், காருக்கு தீ வைத்ததாக சதீஷ்குமார், காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து சதீஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

சதீஷ்குமார் பா.ஜ.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

car leaders police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe