Advertisment

தீபம் ஏற்ற அனுமதி கேட்டுச் சென்ற பா.ஜ.க.வினர் கைது...!

BJP leader arrested vizhupuram

Advertisment

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில், செஞ்சிக் கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கேட்டுச் சென்ற பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் பா.ஜ.க.வின் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன், தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீரங்கன், செஞ்சி நகர்மன்றத் தலைவர், இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உட்பட 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், கைதானவர்களை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளரை சந்தித்து, இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். இவர்களுடன் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜன், விஷ்வ ஹிந்து பரிஷத் கோட்டப் பொறுப்பாளர் நாகராஜன், இளைஞரணி மாவட்டப் பொருளாளர் வெங்கடேச பெருமாள், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe